மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பும் பிரபல தொகுப்பாளர் தீபக், என்ன ஸ்பெஷல் தெரியுமா?

89

தீபக்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம், இந்த தொலைக்காட்சி மூலம் பிரபலமான நட்சத்திரங்கள் மிகவும் அதிகம்.

அந்த வகையில் விஜய் டிவி-ல் முன்பு பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தான் தீபக், இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் இருந்தது.

மேலும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமின்றி சன் டிவி தொலைக்காட்சியில் தென்றல் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல வருடகாலமாக இவரை விஜய் டிவி தொலைக்காட்சியில் பார்க்கமுடியாத நிலையில் தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பவுள்ளார்.

ஆம், தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தான் தீபக் ஹீரோவாக வரவுள்ளார், மேலும் அவருடன் பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திராவும் அந்த சீரியலில் நடிக்கவுள்ளார்.