டபுள் ஹீரோ படத்துக்கு ஓகேதான், ஆனால் ஒரு கண்டிஷன்.. இயக்குனர்களுக்கு செக் வைக்கும் விக்ரம்!!

114

சீயான் விக்ரம்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சீயான் விக்ரம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் டபுள் ஹீரோ படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகிறார். ஆனாலும் அது ஒரு கண்டிஷன் வைத்துள்ளார் என்பது தான் முக்கியமான விஷயம்.

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் சீயான் விக்ரம். கிளாஸ் ஹீரோவாக வந்து பின்னர் மாஸ் ஹீரோவாக சாமி என்ற படத்தின் மூலம் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த விக்ரமுக்கு சமீபகாலமாக அவருடைய திரை வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது அவரது வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி.

கடைசியாக விக்ரம் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக எப்படியாவது வெற்றி படத்தை கொடுத்து இழந்த தன் மார்க்கெட்டை மீட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

அந்த வகையில் சீயான் 60, கோப்ரா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் தொடர் வெற்றிப் படங்களாக அமையும் என்கிறார்கள் விக்ரம் வட்டாரங்கள். விக்ரம் எப்போதுமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் அதில் ஒரு கண்டிஷன் வைத்துள்ளாராம். அதாவது ஒருவருக்கு அதிக அளவில் முக்கியத்துவமும், இன்னொருவருக்கு ஏனோதானோ என கதை எழுதுவதும் இருக்கக் கூடாது. இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிக்க தயார் எனவும் கூறி வருகிறாராம்.

உச்சத்தில் இருக்கும் நடிகர் சிங்கிள் ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் சில கண்டிஷன்களுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க முன் வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.