நடிகை சமந்தாவின் லேட்டஸ் லுக்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

55

நடிகை சமந்தா…

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க இருக்கிறார். இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாவில் லேட்டஸ் போட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

அதுவும் இளம் மஞ்சள் கலந்த பச்சைநிற உடை அணிந்து கொண்டு இருக்கும் நடிகை சமந்தா கொடுக்கும் கேஷுவல் லுக்கிற்கு நெட்டிசன்கள் பலரும் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

16 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட நடிகை சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் வொர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் யோகா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு பேஷன் உடையணிந்த புகைப்படங்களையும் இவர் பதிவிட்டு வருகிறார்.

இவை அனைத்திற்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மஞ்சள் உடையணிந்த நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.