அஜித்தின் வலிமை பட கதையே இதுதானா, முக்கியமான இடத்தில் பதிவு செய்துள்ள தகவல்!!

90

வலிமை…

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் முதன்முதலாக நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரித்த இப்படம் ஹிந்தியில் வெற்றியடைந்த பிங்க் என்கிற படத்தின் ரீமேக்.

இப்படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த பட வாய்ப்பையும் வினோத்திற்கே கொடுத்துவிட்டார். தற்போது வலிமை என்கிற பெயரில் படம் உருவாகி வருகிறது.

வேகமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் ஏகப்பட்ட கொரோனா பிரச்சனை. தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.

அஜித்தும் டப்பிங் வேலையை முடித்துவிட்டார் என்கின்றனர். தற்போது என்ன தகவல் என்றால் இப்படம் இளம் வயதில் அஜித் பைக் ரேஸ் வீரராக இருப்பதாகவும்,

அப்போது சிலரின் சதியால் அதை விட்டு விலகி பின்னர் போலீஸாக மாறி அவர்களை பழிவாங்குவது போன்ற கதை என IMBD பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்,