கீர்த்தி சுரேஷ்க்கு என்னதான் ஆனது படபிடிப்பில் நடந்த அசம்பாவிதம்.!

67

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அந்தவகையில் இவர் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அண்ணாத்த திரைப்படத்தில் 8 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகிருந்தது தற்போது தான் மீண்டும் அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சர்க்காரு வாரி பட்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த தெலுங்கு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவுவதால் இத்திரைப்படத்தின் நடிக்கும் அனைவருக்கும் கோரானா பரிசோதனை எடுக்கப்பட்டு பிறகு படபிடிப்பின் செட்டிலேயே இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடித்து வரும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனவே படக்குழுவினர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் இந்நிலையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் கீர்த்தி ரேஷ்க்குஷுக்கு என்ன ஆச்சு பத்திரமா தான இருக்காங்க என்று சோஷியல் மீடியா மூலம் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.