நடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?

558

நடிகர் விஜய்…

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யையும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை இயக்க அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.