35 வயதில் உயிர்விட்ட இளம் நடிகர்.. அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!!

648

டி எஸ் மஞ்சுநாத்…

சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதேபோல் சமீபத்தில் டாக்டர் விவேக் கொரோனா தடுப்பூசியை போட்டு மறு நாள் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் தற்போது கன்னட சினிமாவின் பிரபலமான டி எஸ் மஞ்சுநாத் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தயாரிப்பாளராக சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கி பின் அவர் தயாரிக்கும் படங்களில் அவரே நடிகராகவும் நடித்து படங்களை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருப்பதாக பாசிட்டிவ் என்று தெரிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் ரசிகர்கள் மட்டும் கன்னட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதால் சினிமா துறை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்.

தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் சூட்டிங் நடக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும். அது முடியாத காரணத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட உள்ளன.

தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் முயற்சிகளை செய்து வருகின்றது. இரண்டாவது அலை மிக மோசமாக இருப்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்து வருகின்றது மத்திய அரசு.