விக்ரம் தோற்றத்தில் களமிறங்கும் கார்த்தி.. வயதான கெட்டப்பில் தீயாய் பரவும் சர்தார் பட மோஷன் போஸ்டர்!

70

சர்தார் பட மோஷன் போஸ்டர்…

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகர்கள் நடித்தால் உடனே ஓடிப்போய் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விடுவார்கள். ஆனால் சமீபகாலமாக ரசிகர்கள் உஷாராக உள்ளதால் நடிகர்கள் என்ன செய்வது என தெரியாமல் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளில் படங்களை நடித்து வருகின்றனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் தெலுங்கு படங்கள் போல் இருப்பதால் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. அதனால் கார்த்திக் தனது அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து நடிக்க முடிவெடுத்துள்ளார்.

அந்தவகையில் இரும்புத்திரை மற்றும் ஹீரோ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் ஆதரவு பெற்ற பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தற்போது கார்த்திக் சர்தார் என படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்டரில் கார்த்தி ஒரு வயதான தோற்றத்தில் நடித்துள்ளது போல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் இதுவரை எந்த படத்தில் வயதான கெட்டப் நடிக்கவில்லை என்பதால் வயதான கெட்டப்பில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

முதலில் திருக்குறள் மூலம் தொடங்கிய படத்தின் போஸ்டரில் இறுதியாக கார்த்திக் டீசர்ட்டில் ஹிந்தி எழுத்து இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இடம் பெற்றுள்ளதால் இப்படத்தில் வடமாநிலங்களில் நடக்கும் சம்பவங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.