பிக்பாஸ் முகின் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

65

முகின்….

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் முகின் நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் முகின் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ’வேலன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.

கோபி சுந்தர் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் சரத்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கலைமகன் என்பவர் ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.