விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியில் கலக்க வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன்- எந்த நிகழ்ச்சி தெரியுமா?

102

ரம்யா கிருஷ்ணன்…

நடிகை ரம்யா கிருஷ்ணனை மக்கள் ராஜ மாதாவாக தான் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு பாகுபலி படம் மூலம் மக்களின் மனதில் அழமாக இடம் பிடித்துவிட்டார்.

அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இதற்கு இடையில் விளம்பரங்களும் நடித்துள்ளார்.

தற்போது இவரைப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் 4 சீசனிலும் வந்த பிக்பாஸ் பிரபலங்கள் பலர் ஜோடியாக நடனம் ஆட இருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு BB Jodigal என பெயர் வைத்துள்ளனர், அண்மையில் நிகழ்ச்சியின் புரொமோ வெளியாக யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ள இருக்கிறாராம் நடிகை ரம்யா கிருஷ்ணன்.