அண்ணாத்த படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கும் முக்கிய நடிகர்!

103

அண்ணாத்த…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் முக்கிய திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் சில காரணங்களால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு வேகமாக இப்படத்தை முடிக்கும் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் ஒரு மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் ஜெகபதி பாபு, அண்ணாத்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆம், அந்த கதாபாத்திரம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் என்றும், அரவிந்த சமேதா படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை முறியடிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jaggu Bhai (@iamjaggubhai_)