கொரோனாவால் தளபதி 65 படத்திற்கு வந்த புதிய பாதிப்பு, அதிர்ச்சியில் ரசிகர்கள்! என்ன தெரியுமா?

58

தளபதி 65…

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த வந்த நிலையில், அதனை முடித்துவிட்டு தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தளபதி 65 படத்தின் வெளியீட்டு தள்ளிப்போகும் என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். மேலும் இப்படத்தின் கதாநாயகியான நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.