வெளியானது தல 61 படத்தின் புதிய அப்டேட்! மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி!!

60

தல அஜித்…

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

கடைசியாக தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து ஒரு வருடமாக இவரின் திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.

இதனிடையே வரும் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அப்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருந்த நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தல 61 படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், இப்படத்திற்காக அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளனர்.

மேலும் இப்படத்திற்காக தல அஜித் 65 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.