தனுஷ் ஆசைப்பட்ட வேலை எது தெரியுமா? கனவு நாசமா போனதற்கு காரணம் இவர்தான்!

88

தனுஷ்…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் நடிகர் தனுஷ். ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல தடங்கல்கள், பல தோல்விகளைச் சந்தித்தாலும் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டதால் தற்போது சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுவருகின்றனர். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு இவரது நடிப்பைப் பார்த்து தேசிய விருது கிடைத்தது.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் விருதுகளும் மற்றொரு பக்கம் வசூலும் வாரி குவித்து வரும் தனுஷ் சினிமாவில் வருவதற்கு முன்பு சமையல் துறையில் சம்பந்தபட்ட கேட்டரிங் படித்து பட்டம் பெற வேண்டுமென ஆசைப்பட்டு உள்ளார்.

ஆனால் இவருடைய அண்ணன் செல்வராகவன் சும்மா இருக்காமல் தம்பி நீ சினிமாவில் வா நான் உன்னை தேற்றி விடுகிறேன் என கூறி நம்பிக்கை கொடுத்து சினிமாவுக்கு அழைத்து வந்துள்ளார்.

இப்போது சந்தோசமாக இருக்கும் தனுஷ் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்கு வந்தபோது என்னுடைய கனவு போனதற்கு காரணம் என் அண்ணன் தான் எனவும் கூறியுள்ளார்.

தற்போது சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளதால் அந்த கனவை பற்றி கவலைப்படாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.