எம்ஜிஆர் வேடத்தில் அஜித்… வைரலாகும் பிறந்தநாள் போஸ்டர்!

78

அஜித்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த வகையில் மதுரையில் அஜித்தை எம்ஜிஆர் ஆக சித்தரித்து பொன்மனச் செம்மலை என கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.