தல அஜித்தின் வலிமை படம் ஓடிடியில் வெளியாகுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்!

90

வலிமை…

எச். வினோத் மற்றும் தல அஜித் கூட்டணியில் உருவாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி வலிமை படத்திற்காக இணைந்தது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில், கடைசியாக ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்க மீதமுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் காட்டுப்பாட்டுகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படம் ஓடிடியில் வெளிவர வாய்ப்புகள் இருக்கிறதா என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், வலிமை படத்திற்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்படம் தியேட்டரிலும்,

ஓடிடியில் சூப்பராக ஓடும் என்று தயாரிப்பாளர் அறிவார். அப்படி இருக்கும் பொழுது எப்படி ஓடிடியில் மட்டும் வலிமை ரிலீசாகும் என்று பதிலளித்துள்ளார்.