பாத்ரூமை வீடியோவாக வெளியிட்ட பிக்பாஸ் அர்ச்சனா.. கேவலப்படுத்திய ரசிகர்களுக்கு கொடுத்த செம பதிலடி!

107

அர்ச்சனா…

ஊரடங்கு சமயத்தில் நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் தொகுப்பாளர்களும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஆளுக்கொரு யூடியூப் சேனலை ஆரம்பித்து நன்றாக கல்லா கட்டி வருகின்றனர்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ராணி போல் தொகுப்பாளினியாக இருந்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அழைத்துச்சென்று கேவலபடுத்தி விட்டது விஜய் டிவி. அதை மறைக்க அப்படியே அவருக்கு தொகுப்பாளர் வேலையையும் போட்டுக் கொடுத்தது.

பெயர் புகழுக்காக ஆசைப்பட்டு சென்று பின்னர் பல்பு வாங்கிக் கொண்டு வந்த பிக்பாஸ் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் சேர்ந்து வாவ் லைஃப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் தன்னுடைய வீட்டை பற்றி ஒவ்வொரு வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல அர்ச்சனாவை திட்டுவதற்காகவே அந்த வீடியோவை பல பேர் பார்த்து வருகின்றனர். இதனால் எவன் திட்டினால் எனக்கென்ன என்று வீடியோவை வெளியிட்டு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பிடித்து வருகிறார் அர்ச்சனா.

அந்த வகையில் சமீபத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறைகளையும் ஒவ்வொரு வீடியோவாக வெளியிட்டு வந்த அர்ச்சனா அவருடைய பாத்ரூமையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். சும்மா இருப்பார்களா நம்ம நெட்டிசன்கள். கமெண்டில் புகுந்து விளையாடி வருகின்றனர்.

இதைப்பார்த்து கடுப்பாகாமல் அர்ச்சனா தன்னுடைய அமைதியான பாணியில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

யார் என்ன பேசினாலும் நாங்கள்தான் ட்ரெண்டிங் நம்பர் ஒன் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நீங்கள் திட்டினாலும் எனக்கு நல்ல வருமானம்தான் என சொல்லாமல் சொல்லியுள்ளார் பிக்பாஸ் அர்ச்சனா.