பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஒரு நாள் சம்பளம் இத்தனை லட்சமாம் : படையெடுக்கும் கூட்டம்!!

960

தற்போது சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் காமெடி நடிகர் யோகி பாபு. அவருக்கு நல்ல வரவேற்பு குவிந்துள்ளது. படங்களில் அவர் வந்தாலே தியேட்டரில் விசில் சத்தமும், சிரிப்பும் நிறைந்து வழிகிறது.

இதனால் அனைத்து படங்களிலும் அவரை புக் செய்துவிடுகிறார்கள். கால்ஷீட் விசயத்தில் அவர் மிக பிசியாக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் அவருக்கும் முக்கியமானதாக அமைந்தன.

ஆனால் இந்த வருடம் அவருக்கு 19 படங்கள் இப்போது வரை உள்ளதாம். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது சம்பளத்தை ஒரு நாளுக்கு ரூ 5 லட்சம் என உயர்த்திவிட்டாராம்.