பட வாய்ப்புக்காக இப்படியுமா கயல் ஆனந்தியின் திடீர் குளிர்ச்சி அவதாரம்!!

557

கயல் ஆனந்தி…

கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார்.

‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார்.

இதில் பண்டிகை, குண்டு மட்டும் வெளியே தெரிந்தது.கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார். அடுத்ததாக இவர் கதாநாயகியாக நடித்துள்ள கமலி பிரம் நடுக்காவேரி படம் வரும் 19ந்தேதி வெளியாகிறது.

ராஜசேகர் துரைசாமி இயக்கி உள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தி அளித்த பேட்டி, ‘என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும்.

பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.

என் திருமணத்தை சென்னையில் ஒரு வரவேற்பு வைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அதற்குள் வெளியில் வந்துவிட்டது. இது முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணம். காதல் திருமணம் அல்ல. அவர் எங்கள் குடும்ப நண்பர். மரைன் இஞ்சினியர்.

மேலும் இணை இயக்குனரும் கூட. விரைவில் அவர் படம் இயக்குவார். எனக்கு நாயகியாக வாய்ப்பு தருவார் என காத்திருக்கிறேன். திருமணத்துக்கு முன்பே நான் தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன். இனியும் அப்படியே நடிப்பேன். கணவர் குடும்பத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்’. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக கவர்ச்சி வேடங்களை தவிர்த்து வந்தார் அம்மணி. ஆனால், தற்போது, இவர் பிரபல நடிகர் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக நீங்களுமா இப்படி..? என்று வாயடைத்து போயுள்ளனர்.