பொது இடத்தில் மனைவியின் வயிற்றை தொட்டு காட்டி சேதி சொல்லிய பிரபல நடிகர்!!

1169

சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஆசையாக தான் இருக்கும். அதில் சில விஷயங்கள் புகைப்படங்கள் மூலமாக வெளியாகிவிடும்.

தற்போது தெலுங்கு சினிமா பக்கம் பலருக்கும் மகிழ்ச்சி சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மஞ்சு மனோஜ், நடிகை லக்‌ஷ்மி மஞ்சுவின் சகோதரர் நடிகர் விஷ்ணு மஞ்சு சந்தோசத்தில் மூழ்கியுள்ளார்.

விஷயம் என்னவெனில் அவரின் மனைவி விரானிகா கர்ப்பமாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை விஷ்ணு தன் மனைவியின் வயிற்றில் பொது இடத்தில் கைவைத்து சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு 2011 ல் Ariaana, Viviana என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2018 ல் Avram என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது விரானிகா நான்காவது குழந்தைக்கு கர்ப்பமாகியுள்ளார்.

இது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயத்திற்கு நடிகை சுஜா வருணி டிவிட்டர் மூலம் நடிகர் விஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.