திருமண கோலத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா!!

149

சின்னத்திரை நடிகை பவித்ரா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளவர் தான் இளம் சின்னத்திரை நடிகை பவித்ரா.

இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆபிஸ் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.