பிக்பாஸ் புகழ் நடிகர் மஹத்தின் மனைவிக்கு நடந்த சீமந்தம்- அழகிய புகைப்படங்கள்!

526

மஹத்-பிராசி…

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு கோபத்திற்கு ஆளானவர் மஹத். நிகழ்ச்சியில் மோசமாக நடந்து கொண்டதால் பிக்பாஸ் குழுவே மஹத்தை கண்டித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்து நிறைய படங்கள் கமிட்டாவார் என்று பார்த்தால் தனது நீண்டநாள் காதலியான பிராசி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் சிலரே சென்றனர். இந்த நேரத்தில் மஹத்-பிராசி இருவரும் தங்களுக்கு குழந்தை வர இருப்பதை சந்தோஷமாக புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.

தற்போது பிராசிக்கு மிகவும் சிம்பிளாக சீமந்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட அனைவரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.