“துபாயில பார்ட்டிக்கு போன இடத்தில் என்னை…” – METOO சம்பவத்தை வெளிப்படையாக கூறிய நிவேதா பெத்துராஜ் !

176

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.இந்தநிலையில், நிவேதா பெத்துராஜின் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருக்கு ஏற்பட்ட METOO சம்பவம் குறித்து அவர் சொன்னது பயங்கர வைரல் ஆகியுள்ளது.

“ஒரு பார்ட்டிக்கு போன இடத்தில் எனக்கும் METOO சம்பவம் நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண். எனக்குள்ள பயம், வெட்கம், காரணமாக நான் அதை அப்போது வெளியில் சொல்லவில்லை.

நான் அந்தப் பார்ட்டிக்கு சென்றிருக்கக் கூடாது. அங்கு போகாமல் இருந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம். அது தவறு என் மீது தான். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் இப்போது நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்” என்று நிவேதா பெத்துராஜ் கூறினார்.