“விஜயுடன் Dance ஆடும் போது நான் கர்ப்பமாக இருந்தேன்” – பிரபல நடிகை மாளவிகா Open Talk !

953

நடிகை மாளவிகா..

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா .

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் இவர் Hot ஆக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், “விஜய்யுடன் குருவி படத்தில் ‘டண்டானா டர்னா’ பாடலில் நடனம் ஆடிய போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அந்த பாட்டுக்கு என்னால சரியா Dance பண்ண முடியல. அந்த வருத்தம் இப்போ வரை உண்டு.

சின்ன சின்ன சிம்பிள் ஸ்டெப்ஸ் தான் என்னால ஆட முடிஞ்சது. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், நல்லா டான்ஸ் ஆடி இருப்பன்…” என்றார் மாளவிகா.