காதலில் சிக்கியுள்ளாரா சீரியல் நடிகை ஜனனி- அவரே வெளியிட்ட விவரம்!

124

ஜனனி…

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடிக்கும் வகையில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் மாயனின் தங்கைகளில் ஒருவராக நடிப்பவர் ஜனனி.

இவர் இந்த சீரியலுக்கு முன் ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார், ஆனால் திடீரென அவரை சீரியலில் இருந்து தூக்க அதனை லைவ் வீடியோவில் கூறி அழுது பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது ஜனனி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மட்டும் தற்போது நடித்து வருவதாக தெரிகிறது.

அண்மையில் அவர் ஒரு வீடியோவில் சீரியல் வேடம், காதல் குறித்து எல்லாம் பேசியுள்ளார். சீரியலில் எனது வேடம் வில்லி கிடையாது, கூடிய விரைவில் மாற்றங்கள் நடக்கும்.

அதேபோல் நிஜத்தில் நான் யாரையும் காதலிக்கவில்லை அப்படி இருந்தால் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.