சீரியலில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட ஹீரோயின் ஸ்ரீதிவ்யா – வைரலாகும் புகைப்படங்கள் !

115

ஸ்ரீதிவ்யா…

நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது. தற்போது தெலுங்கு படங்கள் மூலமாக தமிழிலும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கும் ஸ்ரீ திவ்யா, ஆரம்ப காலத்தில் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் “ஸ்ரீதிவ்யாவா இது..? நம்பவே முடியலையே…” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.