“என் சம்முகுட்டி – அ என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?” – FAMILYMAN 2 SERIES – இல் லீக் ஆன சமந்தா GET UP !

129

சமந்தா….

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடித்து வருகிறார். இந்த Web series – இல் இருந்து சமந்தாவின் கெட்டப் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “என் சம்முகுட்டி – அ என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?” என்று கதறி வருகிறார்கள்.