இரண்டாம் கல்யாணம் எப்போது எனக் கேட்டு ரசிகர்.? வீடியோ வெளியிட்டு உறுதி செய்த டிடி!

73

திவ்யதர்ஷினி…

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

காபி வித் டிடி, அன்புடன் டி டி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர். இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சமீபகாலமாக பல நடிகைகளும் தங்கள் வாழ்க்கை நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் பற்றியும் கசப்பான அனுபவங்களை பற்றியும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

அப்படி திவ்யதர்ஷினி டம் ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வரிசையாக வீடியோ ஒன்றை போட்டு அந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுடையது சொந்த ஊர் என கேட்டதற்கு என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூரில் உள்ள தென்னங்குடி கிராமம் என கூறியுள்ளார். அம்மாவுடைய சொந்த ஊர் கேரளாவில் உள்ள மாஹே எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு மற்றொரு ரசிகர் உங்களது இரண்டாவது காதலைப் பற்றி சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திவ்யதர்ஷினி முதல் காதல், இரண்டாவது காதல் என படத்தில் காட்டியது போல் எதுவும் கிடையாது.

ஒரே நேரத்தில் நான்கைந்து பேரை காதலித்தால் தான் தவறு. ஆனால் வாழ்க்கையில் 1, 2 காதல் வருவது தவறில்லை என அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.