“ஓ ஜோடியா போட்டுகுறீங்களா…” – கொரோனா தடுப்பூசி போட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா !

70

விக்னேஷ் சிவன்-நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. இப்போது கொரோனா தடுப்பூசி எல்லாரும் போட்டுக்கொண்டு வருவதால்,

இவரும் கொரோனா தொற்றின் மீது இருக்கும் பயத்தில் காரணமாக, இவரும், இவரின் காதலரும் ஆன விக்னேஷ் சிவனும் அந்த கொரோனா தடுபூசியை இன்று போட்டுகொண்டார்கள்… இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

“நயன்தாரா போட்டுகிட்டாங்க இனிமே நாங்க கண்ண மூடிக்கிட்டு ஊசியை போடுக்குவோம்” என்று ஒரு கும்பல் சொல்ல, இன்னொரு பக்கம் “ஓ ஜோடியா போட்டுகுறீங்களா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.