மாஸ்க் கழட்டி லுக்கு விடும் அனுஷ்கா.. புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்!!

123

அனுஷ்கா…

தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. ஆனால் வேட்டைக்காரன் படத்தின் மூலம்தான் அனுஷ்கா மிகவும் பிரபலமானார்.

அதற்கு காரணம் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய்யுடன் இவர் இணைந்து நடித்ததால் இந்த கதாநாயகி யார் என தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் அனுஷ்கா பிரபலமானார். மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க ரசிகர்கள் ரசிக்க கூடிய நடிகையாகவும் உருவானார்.

இவர் தமிழ் தாண்டி தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. அதற்கு காரணம் இவரது நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டன.

சமீபத்தில் அனுஷ்கா குண்டான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின அந்தளவிற்கு அனுஷ்கா படு குண்டாக இருந்தார். தற்போது அனுஷ்கா அவரது வீட்டிற்கு வெளியே நின்று ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா வீட்டில் சார்லி சாப்ளின் புகைப்படம் இருப்பதால் சார்லி சாப்ளின் உடன் அனுஷ்கா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அனுஷ்கா ஸ்லிம்மாக இருப்பதாகவும் கூறிவருகின்றன.