விரைவில் திருமணம் செய்யப்போகும் பிக்பாஸ் கவிஞர் சினேகன் – பொண்ணு யார் தெரியுமா ?

77

சினேகன்…

முதலில் கிராமத்து பாடல்களை எழுதி கொண்டிருந்த சினேகன் ராம் படத்தில் வந்த ஆராரிராரோ, பாண்டவர் பூமி படத்தில் வந்த “அவரவர் வாழ்கையில், ஆயிரம் ஆயிரம் மாற்றங்களை” என்கிற பாடல்கள் மூலம் எட்டுத்திக்கும் பிரபலமானார்‌.

அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி விஜய் டிவி பிக் பாஸ்க்கு வந்தார், அப்படியே தனது திறமையால் உடனிருக்கும் போட்டியாளர்களை கட்டி பிடித்து பொது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார். இவர் பங்கேற்ற முதல் சீசனில் இவரை பார்க்க தனது தந்தையார் வந்த எபிசோட் இன்று அளவிற்கும் யாராலும் மறக்க முடியாது.

இந்தநிலையில், பிக்பாஸ் முடிந்த பிறகு கமல் கட்சியில் இணைந்த சினேகன், அவருக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்கிறார். தினமும் கொத்துக்கொத்தாக காலண்டர் Paper போல் எல்லோரும் கட்சியிலிருந்து விலக இவர் மட்டும் இன்னும் இருக்கிறார்.

விஷயம் என்ன என்று பார்த்தால், சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் மணப்பெண் அவருடைய நெருங்கிய உறவினரின் பெண் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அதுவும் இந்த திருமணம் நடந்தால் கமல் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனிடம் தேதி கேட்டு இருப்பதாகவும், அவர் தேதி கொடுத்தவுடன் அந்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.