“என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டேன்…” – சிவகார்த்திகேயனின் வீடியோ வைரல் !

94

சிவகார்த்திகேயன்….

CORONA வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பல திரை பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த தொகையை முதல்வரின் கணக்கிற்கு அனுப்பி விடுகின்றனர்.

சிலர் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக காசோலையை வழங்குகின்றார்கள். இந்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் ஓர் வீடியோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கு உதவி செய்துள்ளார்.

அந்த வீடியோவில், “கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நம்மளை சுற்றியிருக்கும் பல உயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்தி தடுப்பதற்காக நமது புதிய தமிழக அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அதில் மிக முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டேன். வீட்டை விட்டு மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படி வெளியே செல்லும் போது மிக முக்கியமானது நாம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்.

இது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான், இருந்தாலும் இவை எல்லாம் கடைபிடிப்பது தான் நமக்காக கொரோனா எதிராக பாடுபட்டுக் கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். கொரோனா நோய் வெல்வோம். மக்களை காப்பாற்றுவோம்.* என்று சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.