இயக்குனரிடம் பர்மிஷன் கேட்டு விழாவிற்கு செல்லும் பிரபல நடிகை.. இதுக்கு கூட பர்மிஷன் வேணுமா? இது ரொம்ப ஓவர் சார்!!

116

இயக்குனரிடம் பர்மிஷன்…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல நடிகைகள் பல படங்களில் நடித்து வருகின்றனர். அப்படி டிக் டாக் மூலம் புகழ் அடைந்து தற்போது பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மிருணாளினி.

இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

அதன் பிறகு பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மிருணாளினி எப்போதுமே படப்பிடிப்பு முடிந்து விட்டால் அவருக்கு கொடுக்கப்படும் அறையில் இருந்து வெளியே சென்று விடுவாராம். எங்கே செல்கிறார் என்ன செய்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாதாம்.

இதனால் பொன்ராம் நீங்க எங்கே செல்வதாக இருந்தாலும் படம் வெளியாவது வரைக்கும் வெளியே செல்லக் கூடாது, எந்த நிகழ்ச்சிகளும் பங்கேற்கக் கூடாது என கூறியுள்ளார். அதற்கு காரணம் இவர் ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் படத்தினைப் பற்றிய தகவலை பகிர்ந்து விடுவார் என்ற பயம் தான்.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் எங்கே போவதாக இருந்தாலும் என்னிடம் பர்மிசன் கேட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என கட்டளையும் போட்டுள்ளாராம். தற்போது படத்தின் நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும், பொது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தாலும் பொன்ராம் பர்மிசன் கேட்டு விட்டு செல்கிறாராம்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்றாலும் ஏதாவது படத்தினை பற்றி தகவல்கள் கேட்டால் கூட பொன்ராம் அவர்களிடம் இதை சொல்லலாம் எனக் கேட்டுவிட்டு தான் சொல்கிறாராம். அந்த அளவிற்கு மிருணாளினி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் பொன்ராம் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.