ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நஸ்ரியா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!!

99

நஸ்ரியா நாசிம்…

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த கதாநாயகியாக வலம் வரும் நாயகிகள் மிகவும் குறைவு. அதில் முதலிடம் எப்பவுமே நம்ம நஸ்ரியா நாசிம் என்பவருக்கு தான்.

நேரம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக வலம் வர வேண்டிய நேரத்தில் திடீரென தன்னைவிட வயது மூத்தவரான பகத் பாசில் எனும் மலையாள நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது நஸ்ரியா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சினிமா வட்டாரங்களில் பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன் பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த நஸ்ரியா மீண்டும் டிரான்ஸ் எனும் படத்தின் மூலம் பகத் பாசிலுடன் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

தற்போது அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ள நஸ்ரியா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அந்த வகையில் பட வாய்ப்புகளுக்காக தினமும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நஸ்ரியா நாசிம் ராஜாராணி படங்களில் வந்ததைப்போல செம க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்..