பிக் பாஸ் புகழ் சம்யுக்தா, விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பரா…? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே…!

72

சம்யுக்தா…

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா, ஆரம்பத்தில் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஆரிக்கும் அவருக்கும் இடையிலான சண்டை தீவிரமடைந்தபோது அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஆரியுடன் சண்டை போட்ட அடுத்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சம்யுக்தா சில படங்கள், டிவி சீரியல்கள் மற்றும் சில ரியாலிட்டி ஷோக்களில் காணப்பட்டார்.

தவிர அப்பப்போ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் அவர் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுகிறார். சமீபத்திய நாட்களில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் சம்யுக்தா நெருக்கமாக இருப்பது போல ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது,

அதன் பிறகு தான் தெரிகிறது விக்னேஷ் சிவனும் சம்யுக்தாவும் நெருங்கிய நண்பர்கள் என்று…”அப்போ விக்னேஷ் சிவன் சைடுல சாட்சிக் கையெழுத்துப் போட ஆள் ரெடி” என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..