திடீர் திருமணம் செய்த சூர்யா, கார்த்தி பட நடிகை – தூள் பட விவேக் Mode – இல் ரசிகர்கள் !

51

பிரணிதா சுபாஷ்…

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா. மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம்.

ப்ரணிதா சுபாஷ் தற்போது ரமண அவதார்’என்ற கன்னட படத்திலும் ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தூள் படத்தில் விவேக்கின் நெஞ்சு வெடிப்பது போல் நேற்று பிரணிதா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்துள்ளது. இவர் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார்.

ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்..