தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ராசி கண்ணா. விஷாலுடன் இவர் நடித்துள்ள அயோக்யா படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் நடிகர் சித்தார்த்துடன் சைதான்கா பச்சா படத்தில் நடித்துவரும் ராசி கண்ணாவிடம் சமீபத்திய பேட்டியில் தற்போது திருமணமான நடிகர்களில் யாருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராசி கண்ணா, சூர்யா தான். ஜோதிகா மேம்மிடம் அவர் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.