லொள்ளு சபாவில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தான் : விழா மேடையிலேயே கண்கலங்கிய யோகிபாபு!!

1168

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பர் யோகி பாபு. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

அவர் நாயகனாக நடித்துள்ள தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மே-4 சென்னையில் நடைபெற்றது. யோகி பாபுவுடன் பல வருடங்களாக ஒரே அறையில் தங்கியிருந்த முத்துக்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் முத்துக்குமரன், யோகி பாபு டிவியில் நடித்து வாங்கி வரும 300 ரூபாய்க்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். அதன்பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு எல்லாம். அன்று முதல் இன்று வரை அவர் பாபுவாக அப்படியே இருக்கிறார் என்று நெகிழ்ச்சியிடன் பேசினார். அதைக் கேட்டு யோகிபாபு மேடையிலேயே கண்கலங்கினார்.

பின்னர் பேசிய யோகிபாபு, நான் விஜய் டிவி லொள்ளு சபாவில் நடித்துவிட்டு 300 ரூபாய் வாங்கி வருவேன். அதைத்தான் முத்துக்குமரன் அப்படி சொன்னார். நான் பத்து லட்சம், பதினைந்து லட்சம் சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

அப்படியில்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன் நான். நேற்று கூட ஒரு புதுமுக இயக்குனர் கேட்டார். உடனே அவரது தயாரிப்பாளரிடம் சொல்லி சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டேன் என்றார்.