கூட ஆடுறவங்களை இடிக்காம ஆடுங்கன்னு சொன்ன ஹீரோ – வெளிப்படையாக சொன்ன சினேகா..!

186

சினேகா…

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. பொதுவாகவே திரையுலகில் காதல் திருமணம் என்பதும், அதன் பிறகு Divorce செய்துகொள்வதும் சகஜம் என ஆகிவிட்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்து, விட்டுகொடுத்து போகிறார்கள்.

அப்படி இருக்கையில் இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியபோது, நான் சினிமாவில் நடிக்க வந்தது மலையாள ஸ்டார் நைட் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். அப்போ அந்த வந்தவர் சில இயக்குனர்களுக்கு என்னை பிடிச்சு போச்சு.

1999-ம் ஆண்டு இரவு நடந்த அந்த நிகழ்ச்சி தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தது. நான் நடிச்ச முதல் படமான அந்த மலையாளப் படம் நல்லா போகவில்லை. ஆனால் அதன் மூலம் எனக்குள் இருந்த கேமிரா பயம் போயே போயிடுச்சு.

மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் சுசிகணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் படத்தில் நடிக்கும்போதுதான் ஒரு பாடல் காட்சியின் போது ஆடும்போது டமால் என்று கால் வழுக்கி விழுந்துவிட்டேன்.

கூட ஆடுறவங்களை இடிக்காம ஆடுங்க என்று நடிகர் பிரசாந்த் என்னிடம் சொன்னார். இப்படி என்னிடம் சிலர் கொடுத்த டிப்ஸ் காரணத்தினால் தான் இன்று ஒரு பெரிய நடிகையாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.