8 வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் அனுஷ்கா.. மார்க்கெட்டை பிடிக்க புது ரூட்!

109

அனுஷ்கா…

நீண்ட காலமாக உடல் எடை கூடி பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த அனுஷ்கா தன்னை விட 8 வயது குறைவான இளம் நடிகர் ஒருவருடன் ஜோடிபோட உள்ள செய்தி தான் தற்போது சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட படத்திற்காக உடல் எடையை ஏற்றி குறைக்க முடியாமல் இப்போதுவரை தடுமாறிக் கொண்டிருக்கும் அனுஷ்கா, அதனால் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளையும் இழந்தார்.

கடந்த சில வருடங்களில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. போதாக்குறைக்கு உடல் எடையை வேறு கூடியதால் ரசிகர்களும் அனுஷ்காவை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

மேலும் அனுஷ்கா நடிக்கும் படங்களில் அவரது உடல் எடையை குறைத்து இளமையாக காட்டுவதற்காகவே தனியாக செலவாகிறது. இதனாலேயே தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை ஓரம் கட்டுகின்றனர்.

இப்படி சுற்றியும் வாய்ப்பே இல்லாமல் தடுமாறிய அனுஷ்காவுக்கு சமீபத்தில் தன்னை விட 8 வயது குறைவான நிவின் போலி ஷெட்டி என்பவருக்கு ஜோடியாக ஒரு ரொமான்டிக் படத்தில் வாய்ப்பு கிடைத்து ஒப்பந்தமாகியுள்ளாராம்.

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதையை வைத்து உருவாகும் இந்த படத்தில் அனுஷ்கா முன்பைவிட மிகவும் இளமையாக தோன்றுவதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை வைத்து விட்டதை பிடித்து விட வேண்டும் என ரொமான்ஸில் எல்லை மீற போவதாகவும் கூறுகின்றனர்.