திருமணத்திற்கு பிறகு அந்த வார்த்தையை ஆர்யா சொல்லமாட்டார்.. கலாய்த்த நடிகர்!!

1225

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டனர். ஆர்யா எப்போதும் மற்ற பல நடிகர் மற்றும் நடிகைகளிடம் நெருக்கமாக இருப்பவர்.

த்ரிஷாவை ‘குஞ்சுமணி’ என பல முறை ஆர்யா கூறியுள்ள நிலையில், இன்று த்ரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை ஆர்யா.

அதை கலாய்த்து நடிகர் சதிஷ் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா அந்த வார்த்தையை மட்டும் சொல்லமாட்டார் என அவர் ட்ரோல் செய்துள்ளார்.