தொகுப்பாளராக போகும் ஸ்ருதிஹாசன்.. போட்டி எனக்கும் என் அப்பாவுக்கும் தான்.!!

101

ஸ்ருதிஹாசன்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவருக்கு ஏகப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெளியாகின.

வெளியான ஒவ்வொரு படங்களும் வசூல் சாதனை படைக்க அடுத்து தமிழ்சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் மற்ற மொழிகளிலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் தமிழ் சினிமாவை மறந்துவிட்டு,

மற்ற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து தற்போது அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இடம்பிடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். தற்போது கமல்ஹாசனுக்கு போட்டியாக பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதை தாண்டியும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி அதில் வெற்றியும் கண்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர்.

தற்போது தனது அப்பாவைப் போலவே தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் சுருதிஹாசன். கமல்ஹாசன் போல் சுருதி ஹாசனும் பன்முகத் திறமை கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசன் எப்படி பாட்டு, நடனம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.

அதேபோல்தான் சுருதிஹாசனும் சொந்த குரலில் பாடியும் உள்ளார். அப்பாவைப் போல் நன்றாக நடனம் ஆடியுள்ளார். நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் அமேசான் தளத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதனுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த நிகழ்ச்சி முதல் நேர்காணல் யாருடன் என்பதும் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே சன் டிவியில் ஹலோ சகோ எனும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.