சீதையாக நடிப்பதற்கு கோடிக்கணக்கில் பணத்தை கேட்ட கரீனா கபூர்.. அதுக்கு இத்தனை கோடியா!

81

கரீனா கபூர்…

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவருக்கு ஹிந்தி சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் அங்கு உள்ளது. திருமணத்திற்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்தன.

அதனாலேயே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கரீனா கபூரை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என அவர் கேட்கும் பணத்தை எல்லாம் கொட்டி வாரி இறைத்தனர். அதனால் இவர் இந்தியில் பல படங்களில் நடித்தார்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் சினிமாவில் பட வாய்ப்புகள் வரவில்லை. வெளியாகும் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த கரீனா கபூர் அவ்வப்போது சினிமாவில் நட்சத்திர நடிகையாக வந்து முகத்தை மட்டும் காட்டி விட்டு செல்வார்.

சமீப காலமாக சினிமாவில் வரலாற்று படங்கள் எடுப்பதற்கு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன்வருகின்றனர். அதற்கு காரணம் ரசிகர்கள் வரலாற்று படத்தை பார்ப்பதற்குத்தான் தற்போது அதிகம் விரும்புகின்றனர். அதனால் கரீனா கபூரை வைத்து ஒரு வரலாற்று படத்தை எடுக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் தேசாய் கரீனா கபூரை பார்த்து படத்தின் கதையைப் பற்றியும் அவருடைய சீதை கதாபாத்திரத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார். இதனைக்கேட்ட கரீனா கபூர் படத்தில் கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது, நான் நடிக்கிறேன் என முன்வந்துள்ளார்.

இதனால் சந்தோஷமடைந்த இயக்குனர் ஒரு சில நிமிடங்களிலேயே அதிர்ச்சியும் அடைந்தார். சராசரியாக தனது படத்தில் 6 கோடி, 7 கோடி சம்பளம் வாங்குவேன். ஆனால் இப்படத்தின் கதை தனக்குப் பிடித்ததாகவும்

எப்படியும் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால் தனக்கு 12 கோடி சம்பளம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனை கேட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் உங்களது சம்பளத்தில் 1 கோடி,2 கோடி ஏற்றலாம் இத்தனை கோடி ஏற்றினால் என்ன பண்ணுவது என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சீதை கதாபாத்திரத்தில் ஏற்கனவே நயன்தாரா நடித்து மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது .அதனால் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நன்றாக நடிக்கும் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.