மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை: வைரலாகும் புகைப்படம் !!

85

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா…

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிராய்ச்சி மிஸ்ரா சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பதும் கர்ப்பமான மற்றும் வளைகாப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகத் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படத்துடன் மகத் பதிவு செய்துள்ளார்.

கடவுள் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை நேற்று காலை பிறந்தது என்றும், பிராய்ச்சி மற்றும் நானும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம் என்றும் எங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் ஒரு அப்பாவாக மாறியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் பிராச்சி மிஸ்ரா மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், மேலும் மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..