எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்!!

110

கீர்த்தி சுரேஷ்…

ரசிகர்கள் மத்தியில் தேவதை போன்று வலம் வரும் நடிகைகள் மிகக் குறைவு. அதில் மிக முக்கிய இடம் கீர்த்தி சுரேஷுக்கு உண்டு. ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்தவர்.

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. அவர் மட்டும் கையில் சிக்கினால் ரசிகர்கள் கைமா செய்து விடுவார்கள். கீர்த்தி சுரேஷிடம் எதை ரசிகர்கள் ரசித்தார்களோ அதையே இழந்து நிற்கிறார்.

இதனால் தற்போது பட வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லை. தெரியாத்தனமாக கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த நடிகையர் திலகம் என்ற படம் வெற்றியடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து சோலோ ஹீரோயின் படங்களில் நடித்தார்.

அதன்பிறகு அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற சோலோ ஹீரோயின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான். இந்த படமாவது தியேட்டரில் வெளியாகி தனக்கு ஒரு நல்ல ரீ-என்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தலையில் இடியை இறக்கும் விதமாக இந்த படமும் ஓடிடிக்கு சென்று விட்டதாம்.

ஏற்கனவே ஓடிடி ஹீரோயின் என ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலையில் இந்த படமும் அங்கு சென்றுள்ளதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் கீர்த்தி சுரேஷ். தற்போதைக்கு அவரிடம் மகேஷ் பாபு பட வாய்ப்பு மட்டும் தான் உள்ளது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.