மகளுக்கு நடனம் கற்று கொடுக்கும் அசின்.. போட்டோவை பார்த்து அய்யோடா என கொஞ்சும் நெட்டிசன்கள்!!

118

அசின்..

அசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர். சிறந்த பரதநாட்டிய டான்சர், 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், தன் அனைத்து படங்களுக்கும் தானே டப்பிங் பேசியவர்.

சினிமாவில் நடிப்பு மட்டும் அல்லாது பல விளம்பரங்களிலும் நடித்தவர். மிராண்டா, தனிஷ்க், லக்ஸ் போன்றவற்றின் பிராண்ட் அம்பாசடர். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் நடித்து கலக்கியவர்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருந்த பொழுது, கஜினி ஹிந்தி ரீ-மேக்கில் அமீர் கானுடன் நடித்தார். அதுவே அவரின் பாலிவுட் என்ட்ரி. பின்னர் ஹிந்தி படங்களில் பிஸியானார்.

அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான, மைகிரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல் ஷர்மாவுடன் காதல் ஏற்பட, தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்துவிட்டு நடிப்புக்கு டா டா காட்டிவிட்டு 2016 ல் அவரை மணந்துக்கொண்டார்.

இந்த தம்பதியருக்கு தற்போது மூன்று வயதில் அரின் ரயின் என்கிற பெண் குழந்தை இருக்கிறார். அசின் தனது மக்களின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிசில் 3 வயது அரினின் வார இறுதி கதக் பயிற்சி என குறிப்பிட்டுள்ளார்.