அந்த விஷயத்தில் அம்மாவை மிஞ்சிட்டீங்க போல.. அர்ச்சனா மகளை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்!

141

சாரா…

பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ தமிழர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றஒன்றாக மாறிவிட்டது. பிக் பாஸ் சில பல சீசன்கள் கடந்துவிட்டது. ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு பிடித்தவர்களை பாராட்டி கொண்டாடுவர், பிடிக்காதவர்களை கிண்டல், கேலி செய்வர். ரசிகர்களின் வெறுப்பை அதிகம் பெற்றவர்களில் ஜூலி, வனிதா என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சென்ற பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் அர்ச்சனா. செய்திவாசிப்பாளராக ஆரம்பித்து பின்னர் இளமை புதுமை, காமெடி டைம் என கலக்கியவர். டிவி தொகுப்பாளராகவும், படங்களிலும் இன்று நடித்து வருகிறார்.

அர்ச்சனா அங்கு பிக் பாஸ் வீட்டில் க்ரூப்பிசம் செய்தார். நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று வரை நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இவரை மட்டுமன்றி அவரது மகள் சாராவையும் விட்டு வைப்பதில்லை நெட்டிசன்கள்.

கேள்வி கேளுங்கள் என்ன சொன்ன நேரத்தில், ஓவரா சீன் போடுறீங்களே, atitude சரியில்லை என்றெல்லாம் கேள்வி கேட்டனர். நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு ஸாரா பதில் தந்துள்ளார்.

‘என்னை பார்க்காமல், என்னிடம் பேசாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் என்ன சொல்வது என தெரியவில்லை. டேக் கேர்’ என பதிவிட்டு உள்ளார். மேலும் ‘என்னால முடியல சார், விட்ருங்க’ என பதில் அளித்து உள்ளார். அதிகம் ஆர்ப்பாட்டம் இன்றி பதில் தந்த 13 வயது சாராவை பலரும் பாராட்டி வருகின்றனர்,