‘பிகில்’ நடிகை ரெபா மோனிகாவின் வேற லெவல் திறமை: வைரல் வீடியோ!!

117

ரெபா மோனிகா..

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா என்பது தெரிந்ததே. பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் ’எப்ஐஆர்’ ’மழையில் நனைகிறேன்’ ஆகிய படங்களிலும் ஒரு சில கன்னட, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரெபா மோனிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வீடியோக்களுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவியும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்தின் பாடல் ஒன்றை இசைத்துக் கொண்டே பாடியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ரெபா மோனிகாவின் வேற லெவல் இசைத்திறமையை அறிந்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து, இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)