இப்போ நயன்தாராவை விட இவங்களுக்கு தான் மவுசு அதிகம் – கோலிவுட்டில் திடீர் திருப்பம் !

1011

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் டாப் கியரில் போய் கொண்டிருப்பவர் நயன்தாரா. பல காதல் தோல்விகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் உச்ச நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார்.

அப்பேர்பட்ட லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு தற்போது ஒரு நடிகை தன் டஃப் கொடுத்து வருகிறார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை.

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார் .

இந்நிலையில், நடிகை நயன்தாராவை விட இவருக்கு அதிக படங்கள், குடும்பத்தினர் மத்தியில் அதிக வரவேற்பு என பிரியாவின் ரசிகர்கள் குதூகலத்தில் இருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா ரசிகர்களோ இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வந்தா பாக்கலாம் என லெப்ஃட்டில் ஹாண்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.