மாடர்ன் உடையில் ஜம்முனு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படம்!

230

ஐஸ்வர்யா ராஜேஷ்..

ஐஸ்வர்யா ராஜேஷ் நம்ப சென்னை வாசி. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரை டு வெள்ளித்திரை சென்றவர்.

கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து படங்களில் நடிக்கும் நடிகை. மணிகண்டனின் காக்கா முட்டை, மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், வெற்றிமாறனின் வடசென்னை, சிவகார்த்திகேயனின் கனா, விருமாண்டியின் க பெ ரணசிங்கம் என இவரின் சினிமா க்ராப் உச்சத்தை தொட்டுள்ளது.

ஆர் கண்ணன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற The Great Indian Kitchen ரீமேக்கில் நடித்து வந்த நேரத்தில் தான் அடுத்த லாக் டவுன் அமலுக்கு வந்தது. சமீபத்தில் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ கூட பகிர்ந்தார்.

இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். இதோ அந்த புகைப்படம்..